
வளர்ந்துவரும் ஏசிசி ஆடவர் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன..
8ஆசிய நாடுகள் பங்கேற்கும் வளர்ந்து வரும் ஏசிசி ஆடவர் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் ஜூலை 13ஆம் தேதி,அதாவது இன்று முதல் இலங்கையில் நடைபெறவுள்ளது. இன்று 2 போட்டிகள் நடக்கிறது காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அதன்படி இலங்கை – வங்கதேசம் (கொழும்பு SSC மைதானம்) மற்றும் ஆப்கானிஸ்தான் -ஓமன் (கொழும்பு CCC மைதானம்) அணிகள் மோதுகின்றது..
8 நாடுகளின் போட்டிகள் அனைத்தும் (50 ஓவர்கள்) R. பிரேமதாச, P. சாரா ஓவல், SSC & CCC ஆகிய 4 மைதானங்களில் நடைபெறும். போட்டியில் உள்ள 8 அணிகளும் தலா 4 பேர் கொண்ட 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான் ஏ, ஓமன், பங்களாதேஷ் ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளும், பி பிரிவில் நேபாளம், பாகிஸ்தான் ‘ஏ’, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ‘ஏ’ மற்றும் இந்தியா ‘ஏ’ அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் அரையிறுதிக்கு தகுதி பெறும், இது ஜூலை 21 அன்று நடைபெறும், அவர்களுக்கு இடையே 2 அரையிறுதி போட்டிகள் நடைபெறும். முதல் அரையிறுதி ஆட்டம் காலை 10 மணிக்கு குரூப் ஏ பிரிவில் முதலிடம் வகிக்கும் அணிக்கும், குரூப் பியில் 2வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கும் இடையே நடைபெறும்.
அதன் பிறகு மதியம் 2 மணிக்கு குரூப்-பியில் முதலிடம் பெறும் அணியும், குரூப்-ஏ-வில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணியும் மோதும். அரையிறுதியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி ஜூலை 23ஆம் தேதி இறுதிப் போட்டியில் விளையாடும். இறுதிப் போட்டி ஜூலை 23 அன்று ஆர்.கே. பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ (IND vs PAK) போட்டி ஜூலை 19 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sri Lanka A takes on Bangladesh A tomorrow at the SSC Ground, Colombo! Will the home side start on a winning note?
Afghanistan A takes on Oman A tomorrow at the CCC Ground, Colombo! Who will come out on top?#ACCMensEmergingTeamsAsiaCup #ACC pic.twitter.com/FNCwnfwuvz
— AsianCricketCouncil (@ACCMedia1) July 12, 2023
The much awaited ACC Mens Emerging Teams Asia Cup, 2023 gets underway on 13th July in Sri Lanka! 8 strong emerging teams will battle it out for the 👑! #ACC#ACCMensEmergingTeamsAsiaCup pic.twitter.com/jbk8U2HpHD
— AsianCricketCouncil (@ACCMedia1) July 6, 2023