
2023 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2023 ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்றுப்போட்டிகள் நடந்து முடிந்து, தற்போது சூப்பர் 4 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சூப்பர் 4ன் முதல் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 10ஆம் தேதி இலங்கையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் மாற்றுநாளில், அதாவது ரிசர்வ் டேயில் (செப்டம்பர் 11ஆம் தேதி) ஆட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்டால் முக்கிய அனைத்து போட்டிகளுக்குமே மாற்று நாள் அறிவிக்கப்படும் . ஆனால் சூப்பர் 4ல் இந்தியா பாகிஸ்தான் போட்டி மட்டுமே ரிசர்வ் டே வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
There'll be a reserve day on 11th September for India Vs Pakistan match if there's no play possible on 10th.
– A fantastic news! pic.twitter.com/oGYG9J5F05
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 8, 2023