
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி நாளை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு 145 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் பருவத் தேர்வான காலாண்டு செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
செப்டம்பர் 20 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனைப் போலவே அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் எனவும் அதனை தொடர்ந்து டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.