
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை பொருத்தவரைக்கும் உட்க்கட்சித் தேர்தல் நாங்க முடித்து இருக்கின்றோம். அடுத்த கட்டமாக மாவட்ட வாரியாக எங்களுடைய பொதுக்கூட்டங்கள், போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்த இருக்கின்றோம். யாருடன் கூட்டணி அப்படிங்கறதை தலைவர் அவர்கள் நிச்சயம் அறிவிப்பார்.
பத்திரிக்கையில் நான் ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னாடி ஒரு செய்தியை பார்த்தேன். தேசிய முற்போக்கு திராவிட கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அழைப்பு இல்லை அப்படின்னு நீங்க எல்லாரும் எழுதி இருக்கீங்க. அதற்கு நான் வந்து தெளிவாக ஒரு பதில் சொல்லணும் என்று நான் நினைக்கிறேன்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை பொறுத்தவரைக்கும் இந்த நிமிடம் வரைக்கும் யாருடனும் கூட்டணி இல்லை என்பதை தலைவர் அவர்கள் அன்னைக்கு அறிவித்தார். அது தேசிய ஜனநாயக கூட்டணியா ? அல்லது அதிமுகவா ? இன்றைக்கு வரைக்கும் நாம எந்த கூட்டணியிலும் இல்லை. கூட்டணியில் இல்லாத போது அவர்கள் எப்படி அழைப்பார்கள் ? அப்படிங்கிறத நீங்க யோசிச்சு பத்திரிகை நண்பர்கள் அதற்காக கருத்தை பதிய வைக்க வேண்டும்.
இனி வரும் காலத்தில் யாருடன் கூட்டணி அமைக்க போகிறோம் என்பதை நிச்சயமாக வெகு விரைவில் கேப்டன் அவர்கள் உங்களுக்கு அறிவிப்பார்கள் என்பதையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். அதனால அழைப்பு இல்லை அப்படிங்கிறது தவறான ஒரு கருத்து. நாங்கள் கூட்டணியில் இல்லை என்பதுனால தான், அவர்கள் அழைக்கவில்லையே ஒழிய… மற்றபடி எதுவும் இல்லை என்பதை உங்களுக்கு நான் தெளிவாக பதிவு வைக்க விரும்புகிறேன்.