
அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அரசை கண்டித்தும், நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்றார். அவர் கூறியதாவது, நம் கட்சி தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. நாம் தாமதமின்றி செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும். வருகிற 2026 ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.
அதுவே நமது இலக்கு. மக்களுக்கு நாம் பல நலத்திட்டங்களை செய்திருக்கிறோம். அவை ஒவ்வொன்றையும் நாம் வாக்குகளாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியம் என்பதை மாவட்டச் செயலாளர்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். நான் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றாலும், கட்சியையும், ஆட்சியையும் கவனித்துக் கொண்டே தான் இருப்பேன். திமுக கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் சிலர் மீது புகார்கள் வருகின்றது. அவை தீவிரமாக விசாரிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.