
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்த நிலையில் உச்சநீதிமன்றம் வரை சென்று அந்த வழக்கில் இடைக்கால தடை வாங்கினார் சீமான். அடிக்கடி சீமானை விமர்சித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிடும் நிலையில் தற்போதும் சீமானை விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கூறப்பட்டிருப்பதாவது, சீமானுக்கு மனசாட்சி இருக்கிறதா போலீஸ் விசாரணைக்கு பயந்து உச்ச நீதிமன்றம் வரை ஓடினார். அங்கு சென்று என்னுடைய வழக்கில் இடைக்கால தடை வாங்கினார். என்னுடைய ஆட்டத்தை பார்ப்பீர்கள் என்று கூறினாரே சீமான் பரதநாட்டியம் ஆட போகிறாரா. என்னை எப்போது பாலியல் தொழிலாளி என்று கூறினாயோ அப்போது உன்னுடைய அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது. நீ இனி பிச்சை தான் எடுப்பாய்.
நீ போட்ட ஆட்டத்தை உலகமே பார்த்த நிலையில் நீ கேடு கெட்டவன் என்று அனைவரும் சொல்கிறார்கள். என்னுடைய பாவம் உன்னை சும்மா விடாதே நீ கண்டிப்பாக நாசமா போய்விடுவாய். விஜயலட்சுமி வழக்கை முடிக்க வழி இல்லை இந்த லட்சணத்தில் முதலமைச்சராக போகிறானாம்.
2026 மட்டும் இல்லை இன்னும் 26 வருடங்கள் ஆனாலும் நீ இப்படி பிச்சைதான் எடுப்பாய் என்று கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.