
தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சி ஒன்றிய வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. இதனை நிறைவேற்ற தான் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதிமுகவில் மீண்டும் சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக கட்சிக்கு தேவைதான். அதே சமயத்தில் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலுடன் அதிமுக அழிந்து விடும் என்று டிடிவி தினகரன் கூறியது உண்மைதான். எடப்பாடி பழனிச்சாமி தலைமையால் நிச்சயம் அதிமுக அழிந்துவிடும்.
அவருடைய தலைமையால் அதிமுகவின் வாக்குவங்கி 20% வரை குறைந்துள்ளது. அதிமுக மீண்டும் சேரக்கூடாது என்று நினைப்பவர்கள் விரைவில் கட்சியை விட்டு வெளியேறுவார்கள். விரைவில் கட்சியில் அனைவரும் இணைய வேண்டும் என்று எல்லோரும் விரும்பும் நிலையில் 2025 ஆம் ஆண்டு இதற்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். மேலும் கட்சியில் இருக்கும்போதே தேமுதிக மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்க்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறினோம். ஆனால் அவர்தான் அதிமுக தனித்து போட்டியிட்டாலை வெற்றி பெறும் என்று கூறி எல்லோரையும் ஏமாற்றிவிட்டார் என்று கூறினார்.