
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று கூறினார். அதன்பிறகு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக திமுக கூட்டணி கலையும் என்றார்.
திமுக கூட்டணியில் இருப்பவர்கள் கூட்டணி தர்மத்தின் காரணமாகவே திமுகவை விமர்சிக்க முடியாமல் இருக்கிறார்கள். கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி உடையும் என்று உறுதியாக கூறினார். மேலும் முன்னதாக அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிசம் கட்சி போன்றவைகள் திமுகவுக்கு எதிராக கருத்து கூறியது குறிப்பிடத்தக்கது.