மதுரையில் நேற்று நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, உங்களுக்கு நவாஸ் கனியை பார்த்தால் கால் நடுங்குகின்றது. ஒவ்வொரு காவல்துறை அதிகாரியையும் நாம் நீதிமன்றத்தில் ஏற்ற வேண்டும். இதுவே அவர்களுக்கு இறுதியாக இருக்கும். தமிழ்நாட்டில் மானம் கெட்ட கூட்டம் ஆட்சியில் இருக்கின்றது. சிக்கந்தர் என்ற நபர் பிறப்பதற்கு முன்பே திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இன்று தர்காவிற்கு செல்கிறேன் என கூறுகிறார்கள்.

சிக்கந்தர் ஏன் அன்று மேலே சென்றார், அன்றைக்கு தர்கா எதுவுமே கிடையாது. மலைமீது உள்ள காசி விஸ்வநாதர் கோவிலை இடிக்க சென்றவர் தான் சிக்கந்தர் என ஊர் மக்கள் கூறுகிறார்கள். நமது கோவிலை இடிக்க சென்றவருக்கு தர்காவா? திருப்பரங்குன்றம் மலையையும் முருகனையும் அபகரிக்கும் திட்டம் தான் இது. இந்துக்கள் நாம் ஒற்றுமையாக இல்லாமல் இருந்தால் தமிழ் கடவுள் முருகனையும் தரித்திரன் ஆக்கி விடுவார்கள்.

முதல் படை வீட்டை கூறு போடுவதற்கு யாருக்கு உரிமை உள்ளது? இன்று முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். இதுதான் ஆரம்பமே, அயோத்தி யுத்தம் இங்கு முதல் படை வீட்டில் தொடங்குகின்றது. 2026 தேர்தலில் முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ளது. இந்த உறுதியுடன் இருப்போம் இந்து ஒருமைப்பாட்டை உலகுக்கு காட்டுவோம் என்று எச் ராஜா பேசியுள்ளார்.