
தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரியில் விஜய் தொடங்கிய நிலையில் 1 கோடி தொண்டர்கள் அவர் கட்சியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு நடிகர் விஜயின் முதல் மாநாடு கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் செயற்குழு கூட்டத்தை நடத்தி 26 தீர்மானங்கள் வரை நிறைவேற்றினார். நடிகர் விஜய் அரசியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் நேற்று அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையே கூட்டணி கிடையாது என்று அறிவித்தார்.
அதாவது அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைப்பை இருப்பதாகவும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுக்கு 156 சீட் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 80 சீட்டு என தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் விஜய் பேசியதாகவும் தகவல் வெளிவந்தது. இதன் காரணமாக புஸ்ஸி ஆனந்த் நேற்று அதிமுகவுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைக்காதது என்றும் 2026 தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதே தமிழக வெற்றி கழகத்தின் நோக்கம் என்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையில் கூட்டணி இல்லையெனில் தனித்து தான் போட்டியிடுவோம் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் செய்தியளர்களை சந்தித்து பேசிய அதிமுக கட்சியின் துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி விஜய் பற்றி சொன்ன விஷயம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அதாவது புதிய கட்சிகள் உருவாகியுள்ளதால் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் நமக்கு மிகப்பெரிய பலப்பரிட்சியாக இருக்கும் என்று கூறினார். தற்போது புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளது என்று பார்த்தால் விஜய் தான். அவர் புதிய கட்சி வந்துள்ளதால் 2026 ஆம் ஆண்டு தேர்தல் மிகப்பெரிய பலப் பரீட்சையாக அமையும் என்று கூறியது விஜயைத் தான் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
அப்படி பார்த்தால் விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்வார். ஏற்கனவே 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று பலரும் கூறிவரும் நிலையில் தற்போது கே.பி முனுசாமி புதிய கட்சியால் 2026 தேர்தல் சவாலாக இருக்கும் என்பது போல் பேசியுள்ளார்.
இதனால் அடுத்த தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு விஜய் சிம்ம சொப்பனமாக திகழ்வாரா என்று பலரும் வினவி வருகிறார்கள். அதன் பிறகு விஜய்க்கு தற்போது ரசிகர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் தொண்டர்கள் கிடையாது எனவே அவர் நீண்ட நெடிய தூரம் பயணித்தால் மட்டும் தான் அவரை அரசியல் தலைவராக ஏற்க முடியும் என்றும் கூறினார்.