திமுக கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கியுள்ள நிலையில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி,

1.அம்பேத்கரை இழிவு படுத்தியதற்காக அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

2. பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 2000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம். உரிய நிதியை வழங்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக கண்டனம் தெரிவித்து தீர்மானம். மேலும் புயலின் போது ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தமிழக அரசு 6675 கோடி நிவாரணம் கேட்ட நிலையில் அதனை கொடுக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

3. டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக கபட நாடகமாடுவதாக கண்டனம் தெரிவித்து தீர்மானம். அதிமுக மற்றும் பாஜக கைகோர்த்து உருவாக்கியது தான் டங்ஸ்டன் சுரங்க ஏலம் என்று கூறப்பட்டுள்ளது

4. தமிழ்நாட்டிற்கு கல்வித்துறையில் உரிய நிதியை வழங்கவில்லை என மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

5. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்

6. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக கைவிட வலியுறுத்தி தீர்மானம்

7. குலத் தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் நிறைவேற்றாது. சாதி பாகுபாடற்றற கலைஞர் கைவினை திட்டத்தை தொடங்கி வைத்துள்ள திமுக அரசுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து தீர்மானம்.

8. 2026 நடைபெறும் சட்டசபை தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக இப்போது இருந்தே உழைத்திட வலியுறுத்தல்

9. தமிழர் பண்பாட்டிற்கு உரிய கலை, இசை மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த தீர்மானம்

10. திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா ஆண்டினை பெருமிதத்துடன் கொண்டாடுவோம்.

11. தமிழர் பண்பாட்டுத்திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழ் பேசும் நல்லுலகம் எங்கும் கொண்டாடுவோம்

12. இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களையும் படகுகளையும் உடனே விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம்.