
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அந்த கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் அடுத்த 63 வாரங்களுக்கு தமிழக வெற்றி கழகம் தான் எதிர்க்கட்சி என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தான் எதிர்க்கட்சித் தலைவர் என்றும் கூறினார். அதோடு 1967-இல் அண்ணா ஏற்படுத்தியது போல் 1977 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஏற்படுத்தியது போல் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பிளவு ஏற்படும் என்றும் அதற்கான அஜெண்டாவும் பிளானிங்கும் ரெடி என்று கூறினார். அதன் பிறகு இன்னும் பல தலைவர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு வரப் போகிறார்கள் இன்னும் பல பூகம்பகங்கள் தமிழக அரசியலில் நடக்கப்போகிறது என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் 5 வருடங்களில் ஆளும் கட்சி வாங்கிய கடன் 9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது எனவும் 15 வருடங்களாக அதிமுக கட்சி 5 லட்சம் கோடி தான் கடன் வாங்கியது என்றும் கூறினார். இந்த நிலையில் விஜயை எதிர்க்கட்சித் தலைவர் என்று ஆதவ் கூறியுள்ளது 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான ஹிண்ட் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அதிமுகவுடன் இணைந்து தமிழக வெற்றி கழகம் போட்டியிட்டால் கண்டிப்பாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே பாஜக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் விஜய் அதிமுகவை ஒரு இடத்தில் கூட விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.