
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் சமீபத்தில் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தி வைத்து தமிழக அரசியல் களத்திற்குள் நேரடியாக நுழைந்துள்ளார். அவய் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் அவருடைய அரசியல் வருகை தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. அதன்பிறகு நடிகர் விஜயுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயுடன் இணைய போவதாக கூறப்படுகிறது. அவர் கூட சமீபத்தில் செப்டம்பரில் கூட்டணி குறித்து விஜய் அறிவிப்பார் என்று தெரிவித்தார். இந்நிலையில் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம் நடிகர் விஜயுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூட்டணி அமையுமா இல்லையா என்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில் தான் முடிவெடுக்கப்படும். மேலும் அது தொடர்பான அறிவிப்புகள் எல்லாம் பின்னர் வரும் என்று தெரிவித்தார்.