தமிழகத்தின் புதிய பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக மற்றும் பாஜக இடையே நீண்ட இழுபறிக்கு பிறகு கூட்டணி அமையவில்லை. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியை உள்துறை மந்திரி அமித்ஷாவும் பேசியுள்ளனர். அன்றைய தினமே கூட்டணி தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசி விட்டதால் இழுபறி என்ற வார்த்தைக்கு இடம் இல்லை.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு துணை முதல்வர் பதவி போன்றவற்றை பற்றி எல்லாம் இப்போது பேச முடியாது. தமிழ்நாட்டில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில் அதன் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவார். நான் திருநெல்வேலியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்.

மேலும் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் பொதுமக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்றும் கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது என்று கூறினார்.