தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் நெருங்குவதால் தற்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் 5 முனை போட்டிகள் நிலவும் என்று கூறப்படுகிறது. அதாவது திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டிகள் நிலவக்கூடும்‌‌. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தற்போதே சீமான் வேட்பாளரை அறிவித்துள்ளார்.

அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் டாக்டர் கௌஷிக் என்பவர் போட்டியிட்டார். இவர் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிடுவார் என்று சீமான் தற்போது அறிவித்துள்ளார். மேலும் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் தற்போது முதல் கட்சியாக வேட்பாளரை அறிவித்து அரசியல் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளார் சீமான்.