
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய x பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக கட்சியை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எண்ணற்ற துரோகங்களை முறியடித்து சிறப்புடன் நடத்தும் ஆசி கிடைத்தது. எனவே இனி நம் இயக்கத்துக்கு உள்பகை கொண்டவர்கள் வேண்டாம் என்பதில் உறுதியோடு இருப்போம். இன்னும் ஒன்றரை வருடங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரை இருக்கும் நிலையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மலர் செய்த அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்க பொதுமக்கள் தயாராக இருக்கிறார்கள்.
நம்முடைய தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்துள்ளது. எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நம்முடைய ஆட்சி அமைவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமையும். மேலும் அதிமுக ஆட்சி அமைய நான் எந்த ஒரு தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ இன்று களைகள் எடுத்த தோட்டமாய் செழித்து நிற்கிறது.
“வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு”என்ற வள்ளுவரின் அறிவுரையை மறக்கலாமா? வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், நண்பர்கள் போல் இருந்து உட்பகை… pic.twitter.com/NzY1rk3pYG
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) October 15, 2024