தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அதனை இன்னும் எடப்பாடி பழனிச்சாமி உறுதிப்படுத்தவில்லை. ஆனால் மத்திய மந்திரி அமித்ஷா மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமையலாம் என்றும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.

அதோடு அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் டெல்லி சென்று எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை நேரில் சந்தித்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியை சந்திக்க இபிஎஸ் வீரம் கேட்டுள்ளார். பிரதமர் மோடியை சந்திக்கிறார் என்றால் கண்டிப்பாக கூட்டணி உறுதி தான் என்று கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து சந்தித்தது.

ஆனால் அதன் பிறகு அண்ணாமலை அதிமுக தலைவர்களுடன் கருத்து முதலில் ஈடுபட்டதால் தான் ஈடுபட்டதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரதமர் மோடியை இபிஎஸ் சந்திக்கிறார் என்றால் கண்டிப்பாக கூட்டணி உறுதி தான் என்று கூறப்படுகிறது. இதேபோன்று ஓ. பன்னீர்செல்வமும் மோடியை தனியாக சந்திக்க நேரம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.