
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னை புளியந்தோப்பு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் உடையக்கூடிய நிலையில் தான் இருக்கிறது. தற்போது அரசியல் களத்தில் இன்றைய சூழலில் கூட்டணி உடையும் அபாயம் இருக்கிறது. கண்டிப்பாக அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி உடையும். எங்களைப் பொறுத்தவரையில் திமுக தான் பிரதான எதிரி. அதே நேரத்தில் பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி அமைக்க மாட்டோம் என கட்சியில் அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுத்துள்ளோம்.
இந்த இரண்டு கட்சிகளை தவிர எங்களுக்கு வேறு யாரும் எதிரி கிடையாது என்று கூறினார். மேலும் முன்னதாக முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் இந்த கூட்டணி எந்த காலத்திலும் முடியாது என்றும் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் இந்தக் கூட்டணி ஜெயிக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்