தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பாக கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, வருகிற 2026 தேர்தலுக்குள் இந்து மக்கள் கட்சி தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கிளைகள் அமைத்து கட்சியை வலிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வக்பு வாரிய சொத்து என தாராபுரம், அலங்கியம், திருப்பரங்குன்றம் போன்ற பகுதிகளில் இந்துக்களின் விவசாய நிலங்கள் அபகரிக்க முயற்சி செய்கின்றனர்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். வக்பு வாரிய மசோதாவை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் ஒரே நாளில் 9 பாலியல் வன்கொடுமைகள் நடப்பது வருத்தமாக இருக்கிறது. வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இந்துக்களின் வாக்கு வங்கி ஒன்றுபட வேண்டும். தேசிய ஜனநாயக முன்னணியில் அதிமுக, சீமான், பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டு திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.