
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பாக வருகிற அக்டோபர் 2ம் தேதி அன்று மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். இந்த மாநாட்டிற்கு பாஜக மற்றும் பாமகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தி திணிப்பு, நீட் தேர்வு போன்றவற்றில் தமிழகம் முதன்மையாக இருக்கும்போது, ஏன் மது ஒழிப்பில் முதன்மையாக இருக்கக் கூடாது என்று அவர் கேள்வி எழுப்பினார். 2016-ம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதியில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தது. ஆனால் அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.
பின்பு 2021 ம் ஆண்டு திமுக ஆட்சியைப் பிடித்தது, ஆனால் மதுவிலக்கு என்ற கோரிக்கையை கைவிட்டது. தமிழகத்தில் அதிகப்படியான ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்த போதிலும் மாநிலத்திற்கான வரி வரிவாய் மிக குறைவாக உள்ளதாக திமுக அரசு கூறுகிறது. பத்திரப்பதிவு மற்றும் டாஸ்மார்க் வருவாய் தான் தமிழ்நாட்டின் பிரதான வருவாயாக உள்ளது. இவ்வாறு இருக்கும்போது தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை மூடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது?. 2026 ம் ஆண்டு நடைபெற இருக்கிற சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, மது போதை ஒழிப்பு மாநாடு அறிவிக்கவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.