அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில், வரும் 2050 ஆம் வருடத்தின் 8 மாதங்களுக்கும் இரண்டு மடங்கு வெப்ப அலை வீசும் என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வில், தொடர் நகரமயமாக்கல் காரணமாக தமிழக நகரங்கள் உட்பட இந்தியாவில் உள்ள 21 நகரங்களிலும் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரிக்கும் என்று அதிர்ச்சி தகவல் கூறப்பட்டுள்ளது.

மேலும் வரும் 2050 வாக்கில் தற்போது இருக்கும் வெயில் காலத்தில் உள்ளதை விட இரண்டு மடங்கு வெப்பம் வருடத்தின் 8 மாதங்களுக்கும் வீசி மக்களை தாங்க முடியாத அவதிக்குள்ளாக்கும் என்று தெரியவந்துள்ளது.