
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று உடல் நலக்குறைவினால் காலமானார். அவருக்கு 75 வயது ஆகும் நிலையில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் சென்னையில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சென்று இரங்கல் தெரிவித்தார்கள்.
இன்று பிற்பகல் வரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் அரசு மரியாதையுடன் தற்போது மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. அதாவது தமிழக அரசியல் மட்டும் இன்றி இந்திய அரசியலிலும் அர்ப்பணிப்புடன் பணி செய்த காரணத்தினால் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சடங்கு செய்யப்பட்டது. மேலும் அவருடைய உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தற்போது மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.