தமிழ் சினிமாவின் “சாக்லேட் பாய்” என்ற அழைக்கப்படுபவர் நடிகர் மாதவன். இவர் “அலைபாயுதே” என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதைத்தொடர்ந்து மின்னலே, பிரியமான தோழி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மலையாளம், ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். நடிகர் மாதவன் ஒல்லியாக இருந்த நிலையில் சமீபத்தில் உடல்நிலை அதிகரித்து காணப்பட்டார். அதன் பின் உடல் எடையை அதிரடியாக குறைத்த மாதவன் தன்னுடைய டயட் சீக்ரெட்டை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, ஜிம் போவது உடற்பயிற்சி செய்வது என்ற எந்த விதமான உடற்பயிற்சியிலும் நான் ஈடுபடவில்லை. அதற்கு பதிலாக உணவை நன்றாக மென்று சாப்பிட்டேன். 40 முதல் 50 முறை தண்ணீர் குடிப்பேன். இதையடுத்து மாலை 6:45 மணிக்குள் இரவு உணவை முடித்து விடுவேன். மேலும் அதிகாலை 90 நிமிடமும், தூங்குவதற்கு முன்னும் நடைப்பயிற்சி செய்வேன். இயற்கையான உணவுகளை உட்கொண்டேன். இதுதான் என்னோட டயட் சீக்ரெட் என்றார்.  மேலும் இதை பின்பற்றி 21 நாட்களில் உடல் எடையை குறைத்ததாக கூறினார்.