அமெரிக்க நாட்டில் உள்ள லூதியானா மாகாணத்தில் Hertz Tower உள்ளது. இது ஒரு 22 மாடி கட்டிடம் ஆகும். இந்த கட்டிடம் சூறாவளியால் சேதமடைந்த நிலையில் கடந்த 4 வருடங்களாக பயனற்ற நிலையில் இருந்தது. இதன் காரணமாக அந்த கட்டிடத்தை வெடி வைத்து தகர்க்க முடிவு செய்தனர்.

அந்த வகையில் இன்று 22 மாடி கட்டிடத்திற்கு வெடி வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 15 வினாடிகளில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. மேலும் சில நொடிகளில் அந்த கட்டிடம் இருந்த இடமே தெரியாமல் முற்றிலும் தரைமட்டமான நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.