அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ. 22 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்குக்கு அனிதாவின் பெயரை சூட்டுமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் நுழைவு தேர்வை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இவரின் மரணத்திற்கு பிறகு தான் நீட் தேர்வு எதிர்ப்புக்கு அனைவரும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் மாணவி அனிதாவின் பெயரை புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கு சூட்டுமாறு உத்தரவிட்டுள்ளார்.