சென்னை வியாசர்பாடி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரங்களை மேற்கொண்டு துண்டு சீட்டுகளை விநியோகித்து வருகிறோம். கிட்டத்தட்ட 11 வாரங்களாக திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று விண்ணை முட்டும் அளவுக்கு தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு இருக்கிறது. போதை பொருள் நடமாட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் போன்றவைகள் அதிகரித்துவிட்ட நிலையில் இவைகளில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக தான் இந்த திண்ணை பிரச்சாரத்தை நடத்துகிறோம்.

இதன் மூலம் அடுத்து வரும் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி அடையும். 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது அதிமுகவின் லட்சியமாக இருக்கும் நிலையில் கண்டிப்பாக 230 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது எங்கள் இலக்காக இருக்கிறது. கண்டிப்பாக எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக மாறும்போது ஜனநாயகம் காப்பாற்றப்படும் என்றார். இதைத்தொடர்ந்து விஜய்யுடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் உங்கள் எண்ணம் நல்ல எண்ணம். நல்ல எண்ணத்தோடு கேட்பதால் கண்டிப்பாக நல்லது மட்டுமே நடக்கும் என்றார். மேலும் அதிமுகவுடன் விஜய் கட்சி கூட்டணி அமைத்தால் நல்லது தான் என்று கூறினார்.