
கோயம்புத்தூர் மாவட்டத்தில் முருகன் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இறந்துவிட்டார். இந்நிலையில் அவருக்கு 24 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவி எம்எஸ்சி படித்து வருகிறார். இவர்கள் இருவரும் நட்பாக பழகிய நிலையில் நாளுக்கு நாள் முருகன் மாணவியிடம் மிகவும் ஆபாசமான முறையில் பேசியதோடு அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மாணவி தொழிலாளியிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
இருப்பினும் அந்த மாணவி வீட்டை விட்டு வெளியே வரும்போதெல்லாம் ஆபாசமாக பேசுவது, சைகை காட்டுவது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளார். அவரை மாணவி கண்டித்த போதும் கேட்காததால் தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் முருகன் மீது ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது முருகன் மாணவியின் உள்ளாடைகளை திருடி அதை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் இதைத்தொடர்ந்து முருகனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.