கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லையில் தேவர காட்டு மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள மல்லேஸ்வர சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் விஜயதசமி திருநாளில் மல்லேஸ்வர சாமி உற்சவ விழா மற்றும் தடியடி விழா போன்றவைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிலும் விஜயதசமியில் தடியடி திருவிழா நடைபெற்றது. அதாவது சாமியை தங்களுடைய ஊர்களுக்கு கொண்டு செல்வதற்காக இரு தரப்பினர் மாறி மாறி தடியால் அடித்து தாக்கி கொள்வார்கள்.

இந்த வினோத திருவிழாவில் 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதாவது 24 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இரு குழுக்களாக பிரிந்து மாறி மாறி அடித்து தாக்குதல் நடத்தியதில் ஒரு தரப்பினர் வெற்றி பெற்ற நிலையில் அவர்கள் சாமியை தங்கள் ஊருக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த திருவிழாவை நிறுத்துவதற்கு அம் மாநில காவல் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த போதிலும் அவர்கள் இப்படி ஒரு அசம்பாவித திருவிழாவை நடத்தி காயங்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.