
தமிழ் சினிமாவில் பட்ஜெட் பத்மநாபன் மற்றும் விருமாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை அபிராமி. இவர் விருமாண்டி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளரான பவனனின் பேரன் ராகுல் பவனனை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அபிராமி தன்னுடன் 24 வருடமாக இருக்கும் மேக்கப் மேன் பிரசாத் இன்னும் சரியாக தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்க தெரியவில்லை என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க