
மேற்கு வங்காளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அவரது குடும்பத்தினருடன் சேர்க்கும் முயற்சியில், அவரது காலணிகள் உதவியுள்ளது.
சுரேஷ் முடியா என்ற அந்த நபர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனது குடும்பத்தினரை வானொலி ஆபரேட்டர்களின் உதவியுடன் காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சுரேஷ் கனிங் பகுதியில் சாலையில் தூங்கிக்கொண்டிருந்தார். அவரது காலணியில் 24 என்ற எண் இருந்தது. என்ன காரணமோ தெரியவில்லை அந்த எண்கள் காவல்துறை அதிகாரிகளை ஈர்த்துள்ளது. இதைஅடுத்து தூங்கிக் கொண்டிருந்த சுரேஷ்யிடம் நீங்கள் யார் என கேள்வி எழுப்பிய போது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது அவர்களுக்கு தெரிய வர, அந்த பகுதியைச் சேர்ந்த வானொலி ஆபரேட்டர்களை தொடர்பு கொண்டனர்.
வானொலி ஆபரேட்டர்கள் சுரேஷின் குடும்பத்தினரை மத்தியப் பிரதேசத்தில் இருப்பதாக கண்டுபிடித்தனர். இருப்பினும் அவரது குடும்பத்தினர் சுரேஷ்யிடம் பேச தயங்கி உள்ளனர். காரணம் அவர் தனது அண்ணியை 20 வருடங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். தற்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் தெரியவந்தது.
சுரேஷ் தனது தாயுடன் சேர மிகவும் விருப்பப்பட்டார் பின்னர் சுரேஷின் தாயார் கண்டுபிடிக்கப்பட, அவர் தனது மகனின் புகைப்படத்தை பார்த்து கதறி அழுதார். பிறகு தாயார் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது அவரது குடும்பத்தினர் அவரை அழைத்துச் செல்ல வருகின்றனர்.