
அமெரிக்காவின் வடபகுதியில் தான் வழுக்கை கழுகு முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. தலை பகுதி மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த கழுகுக்கும் அமெரிக்க வரலாற்றுக்கும் 240 வருடங்களுக்கு மேலாக தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் வலிமை மற்றும் சக்தியின் அடையாளமாக இந்த கழுகு பார்க்கப்படுகிறது. இதனால் வழுக்கை கழுகை நாட்டின் தேசிய பறவையாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்காவில் கோரிக்கை எழுந்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய பறவையாக வலுக்கை கழுகு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவிற்கு தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் வழங்கி அங்கீகரித்துள்ளார்.