
தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சி அந்தஸ்து வழங்க இருக்கிறது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி. அதன் பிறகு வெற்றிக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிய முதல்வர் ஸ்டாலின், திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. கடந்த 1999 ஆம் ஆண்டில் இருந்து இந்த இயக்கம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறது. தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 25 ஆண்டு கால கனவு நிறைவேற இருக்கிறது. மேலும் தேர்தல் ஆணையம் மாநில கட்சி அந்தஸ்து வழங்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.