பாலிவுட் சினிமாவில் முன்னணி பின்னனி பாடகியாக திகழ்பவர் அல்கா யாக்னிக் (58). இவர் 90களில் பாடிய ஏராளமான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் 25 மொழிகளில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை குவித்துள்ளார்.

இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அரிய வகை வைரஸ் பாதிப்பின் காரணமாக கேட்கும் திறனை இழந்துள்ளதாக தற்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கேட்கும் திறனை இழந்ததால் பொது இடங்களுக்கு வருவதற்கு தயக்கமாக இருக்கிறது எனவும் இந்த நேரத்தில் அனைவரும் எனக்கு உதவியாக இருக்க வேண்டும் எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.