
புதுடெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரின் அதிரடி நடவடிக்கையில், 26 ஐபோன்களை கடத்தி வந்த ஒரு பெண் கைது செய்யப்பட்டார். ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு வந்த இந்தப் பெண்ணின் பையில் ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. சோதனையின் போது, அந்தப் பெண்ணின் பையில் டிஷ்யூ பேப்பரில் சுற்றி மறைத்து வைக்கப்பட்ட 26 ஐபோன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பற்றாக்குறை கட்டணத்தை தவிர்க்க, அவ்வாறு ஐபோன்களை கடத்த முயற்சித்திருந்ததாக சந்தேகிக்கப்படுகிறார். பறிமுதல் செய்யப்பட்ட இந்த ஐபோன்களின் மொத்த மதிப்பு சுமார் 37 லட்சம் ரூபாய் ஆகும். இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்ததோடு, குறித்த பெண்ணையும் கைது செய்தனர்.