
வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே தொடர்ந்து மோதல் போக்கு என்பது அதிகரித்து வருகிறது. தென்கொரியாவை சேர்ந்தவர்கள் வட கொரிய அதிபருக்கு எதிராக துண்டு பிரசுரங்களை தொடர்ந்து அனுப்பி வந்தனர். இது தொடர்பாக வடகொரியா அதிபர் கண்டித்த போதிலும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் வட கொரியாவில் இருந்து 260 ராட்சத பலுன்கள் மூலம் மலம் மற்றும் குப்பைகளை தென்கொரியாவுக்கு அனுப்பியுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என தென்கொரியா அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இதுபோன்று ராட்சச பலூன்கள் வந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த ராட்சத பலுன்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.