
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புத்கம் மாவட்டத்தில் பெண் ஒருவர் 27 பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.ஒவ்வொருவரை திருமணம் செய்த பிறகும் அவர்களுடன் 10ல் இருந்து 20 நாள் வரை இருந்து விட்டு அதன் பிறகு தனக்கு கிடைத்த நகை மற்றும் பணங்களை திருடிக் கொண்டு காணாமல் போய்விடுவார்.
அந்த 27 பேரில் 12 பேர் தங்கள் மனைவியை காணவில்லை என்று கூறி ஒரே பெண்ணின் புகைப்படத்தை கொடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த திருமண நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.