ஹரியானா மாநிலத்தில் குல்சீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் காவல்துறையினர் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு  அவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் தேடிய போது அவர் தலைமறைவானார்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த குல்சீர் தற்போது பிடிபட்டுள்ளார். இவரை கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஹரியானாவில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரை ராஜஸ்தான் காவல்துறையினரிடம் ஒப்படைக்க முடிவு எடுத்துள்ளனர்.