
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கைகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்து இருந்த நிலையில் இதற்கு தற்போது அமைச்சர் கே.என் நேரு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, அதிமுக ஆட்சிக்காலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்ளாத தொடு கடந்த 2015 ஆம் முன்னறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விட்டதால் 289 பேர் பலியாகினார்.
இதையெல்லாம் மறந்துவிட்டு தற்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவதா.? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் ஸ்டாலின் மீட்பு பணிகளில் ஈடுபடாமல் ஆலோசனை கூட்டம் நடத்துவதாக வாய் புளித்ததோ அல்லது மாங்காய் புளித்ததோ என்று எதிர்க்கட்சித் தலைவர் உளறிக் கொண்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பத்திரிகையும் படிப்பதில்லை தொலைக்காட்சியும் பார்ப்பதில்லை என்பது அவருடைய அறிக்கையின் மூலம் தெளிவாக தெரிகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு மொத்தமாக ஏரி நீரை திறந்து விட்டு 289 பேர் பலியாக காரணமாக இருந்தவர்கள் தற்போது பருவமழை முன்னேற்றத்தை நடவடிக்கைகள் குறித்து விமர்சிப்பது சாத்தான் வேதம் ஓதுவது போன்று உள்ளது. அப்போது நடைபெற்ற வெள்ள பாதிப்புக்கு மனித தவறே காரணம். மேலும் பருவ மழை ஆலோசனை கூட்டம் எதற்காக என்று கேட்கும் எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து பொதுமக்கள் சிரிக்க தான் செய்வார்கள் என்று கூறியுள்ளார்