பிரதமர் மோடி தொடங்கி வைத்த நீர் வழி சொகுசு கப்பலான தனது 50 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு திப்ருகார் சென்றடைகிறது. உலகின் மிக நீளமான நீர்வழி கப்பலான எம்.வி.கங்கா விலாஸ் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வரணாசியில் இருந்து பிரதமர் மோடி குடியரசு தொடங்கி வைத்தார். இந்திய தயாரிப்பான இந்த கப்பல் பாட்னாப் சாகிப், புத்தகையா, விக்ரம் சிலா, சுதர்பன், காசிரங்கா, தேசிய பூங்காவலியாக பிப்ரவரி 28ஆம் தேதி திப்ருகாரை சென்றடைகிறது. இந்த கப்பல் கிட்டத்தட்ட 50 நாட்களில் 3200 கிலோமீட்டர் தூரத்தை கடக்க இருக்கிறது.

இந்த கப்பலின் பயணம் திப்ருகாரில் நிறைவு பெறுகிறது. தனித்துவமான வடிவமைப்புடன் கட்டமைக்கப்பட்ட இந்த சொகுசு கப்பலில் 18 அறைகள் உள்ளன. இந்த கப்பலில் முன்பதிவு செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும் என்பதால் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளார்கள். திப்ருகாரில் நாளை மறுநாளுடன் கப்பலின் நீண்ட தூர பயணம் நிறைவு பெறுவதால் கப்பலை வரவேற்க ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சரகம் ஏற்பாடு செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.