
தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர் மோடி, பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் தரையிறங்கினார். இங்கிருந்து பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு கார் மூலம் சென்றார். இதனையடுத்து நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது, தமிழக மக்கள் பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிமையானவர்கள். நெல்லையப்பர் காந்திமதி அம்மனுக்கு எனது நமஸ்காரங்கள். நாட்டுக்காக உழைக்க நெல்லையப்பர் காந்திமதி அம்மன் நல்லாசி தர வேண்டும்.
தமிழக மக்கள் பாஜக மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார்கள் தமிழக மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயல்படுவேன். இது மோடியின் உத்தரவாதம். பாஜகவின் சமூக நீதி, நேர்மையான அரசியலை தமிழக மக்கள் கவனித்து வருகிறார்கள். தமிழகத்தில் குழந்தைகள் தொடங்கிய அனைவரும் பாஜக மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழக மக்கள் பாஜக அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழக மக்கள் வருங்காலத்தைப் பற்றிய தெளிவுடன் இருப்பவர்கள்.தமிழ்நாட்டு மக்கள் வருங்காலம் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் தெளிவாக இருப்பார்கள்.
புதிய சிந்தனையோடு இந்தியாவோடு சேர்ந்து தமிழகமும் சிந்திக்கிறது. நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றம் இந்தியாவில் ஏற்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில் டெல்லிக்கு மிக அருகில் தமிழ்நாடு வந்துவிட்டது. மத்திய அரசால் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு பெருமை அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் திட்டத்தால் குக் கிராமங்களுக்கும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று நாடு 100 அடி முன்னேறினால் தமிழகமும் மிக வேகமாக 100 அடி முன்னேறும் என உத்தரவாதம் அளிக்கிறேன். தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் மத்திய அரசின் திட்டங்கள் சென்றுள்ளன. உஜ்வாலா திட்டம் மூலம் பெண்களுக்கு நன்மை கிடைத்ததால் தான் நான் செல்லும் இடமெல்லாம் பெண்கள் மிகுந்த வரவேற்பு கொடுக்கிறார்கள். உஜ்வாலா எரிவாயு திட்டத்தின் மூலம் 40 லட்சம் மகளிர்க்கு எரிவாயு சிலிண்டர் இணைப்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பட்டியல் இனத்தை சேர்ந்தவரை எனது அமைச்சரவையில் வைத்துள்ளேன். ஹிந்தி பேசும் மாநிலத்தில் இருந்து தமிழரான இல்முருகனை பாஜக எம்பி ஆகியுள்ளது. தமிழகத்திலிருந்து நாங்கள் ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம் என எல். முருகனை குறிப்பிட்டு பேசினார். 5 ஆண்டுகளுக்கு முன் 21 லட்சம் குடும்பங்கள் குழாய் மூலம் குடிநீர் பெற்றது. ஆனால் தற்போது ஒரு கோடி குடும்பத்திற்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அரசிடமிருந்து ஏராளமான தமிழக மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்துள்ளோம். பாகிஸ்தானிடமிருந்து பைலட் அபிநந்தனை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தது பாஜக அரசு. திமுகவும், காங்கிரசும் இணைந்து நாட்டை பிளவுபடுத்த முயல்கின்றன. மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்படும் மாநில அரசிடம் கணக்கு கேட்க வேண்டிய நேரம் இது. நாடாளுமன்றத்தில் ராமர் கோயில் விவாதத்தின் போது திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. திமுகவும் காங்கிரசும் அப்புறப்படுத்த வேண்டிய கட்சிகள். மத்திய அரசு என்ன செய்தாலும் குறை கூறும் மாநில அரசின் தடைகளுக்கு மத்தியில் மக்கள் நல பணிகளை நாங்கள் செய்கிறோம். தமிழகத்தை ஆளும் மாநில அரசு வெறுப்பு அரசியலை பரப்புகிறது” என தெரிவித்தார்.
பல ஆண்டு காத்திருப்புக்குப் பின் அயோத்தியில் குழந்தை ராமர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வேஷம் போடும் திமுகவின் வேசத்தை நிச்சயம் கலைப்போம். எங்களுக்கு நாடும் நாட்டு மக்களும் தான் முக்கியம். இது வலிமையான பாரதம் என்பதால் அபிநந்தனை பாகிஸ்தானில் இருந்து மீட்டோம். கத்தாரிலிருந்து மரண தண்டனை பெற்ற 8 முன்னாள் ராணுவ வீரர்களை இந்தியா அழைத்து வந்தோம். இந்தியர்கள் வெளிநாடு செல்லும் போது கிடைக்கும் மரியாதையே மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளுக்கு உதாரணம்.
அண்ணாமலை வந்துவிட்டதால் தமிழகத்தில் திமுகவிற்கு வேலையில்லை. சீன கொடியுடன் திமுக சார்பில் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துள்ளார்கள். குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள விளம்பரத்தில் சீனாவின் ராக்கெட் திமுக பயன்படுத்தி உள்ளது. சீன கொடியுடன் விளம்பரம் கொடுப்பதுதான் திமுகவின் தேச பக்தி தமிழகத்தில் திமுகவை இனி தேடும் நிலை ஏற்படும். தமிழகத்தில் இனி திமுக என்கிற ஒரு கட்சி இருக்காது. தேர்தலுக்குப் பிறகு தேடினாலும் திமுக கிடைக்காது. முற்றிலுமாக அகற்றப்பட வேண்டிய கட்சி திமுக.
மத்திய அரசு எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் தமிழக அரசு குறை சொல்கிறது. ராமருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் என திமுகவினர் கேள்வி கேட்கின்றனர். தென்னிந்திய மக்களுக்காக பாஜக பாடுபடும். நாட்டை கொள்ளை அடிப்பதற்காக வளர்ச்சி திட்டங்களை தடுத்து வருகின்றனர். ராமர் கோவில் திறப்பு என்ற ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையை திமுகவினர் எதிர்த்தனர்.
எனக்கு தமிழ் மொழி தெரியாது, ஆனால் தமிழ் மக்களை நேசிக்கிறேன். சுயநலம் மிக்கவர்களை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள். தன் குடும்பமும் தன் பிள்ளைகளை முன்னேற நினைப்பவர்களை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும். தமிழர்களை, தமிழர்களின் பிள்ளைகளை முன்னேற்ற நான் இருக்கிறேன். தங்களது குடும்பத்தை வளர்க்கவே சிலர் ஆட்சிக்கு வருகிறார்கள். அவர்களின் குழந்தைகளைப் பற்றி மட்டுமே அவர்கள் நினைக்கிறார்கள். உங்கள் குழந்தைகளை பற்றி நினைக்க நான் இருக்கிறேன். மோடி இருக்கும் வரை யாரும் உங்கள் மீது கை வைக்க முடியாது. நான் பேசுவது புரியவில்லை என்றாலும் என் மனதை தமிழர்கள் புரிந்து கொண்டனர். 3வது முறையாக பிரதமராக தமிழர்கள் எனக்கு ஆசிர்வாதம் வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.
#WATCH | Tamil Nadu: In Tirunelveli, PM Modi says "…Earlier, the DMK leader was busy all his life to make their son the Chief Minister. Now the Chief Minister is busy making his son the Chief Minister. All these DMK people are busy setting up their children and upsetting the… pic.twitter.com/AIA4w9BDsu
— ANI (@ANI) February 28, 2024