
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் பகுதியில் ஒரு 36 வயது பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு 11 வயது சிறுவனுடன் தவறான பழக்கம் ஏற்பட்டது. இது அந்த சிறுவனின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் தன் மகனை கண்டித்ததோடு வேறு பகுதிக்கு அவனை மாற்றினர்.
ஆனால் அந்த சிறுவன் அந்த ஊரை விட்டு ஓடி அந்த பெண்ணிடம் போனான். அந்தப் பெண்ணும் சிறுவனும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணையும் சிறுவனையும் கண்டுபிடித்தனர் .மேலும் அந்த பெண்ணின் மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.