
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோகா மாவட்டத்தில் இன்று நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் ஷப்னம் என்ற ஒரு 30 வயது பெண் வசித்து வருகிறார்.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் முதல் கணவரை பிரிந்து இரண்டாவது ஆக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஷப்னத்திற்கு 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் மீது ஆசை வந்தது. இதனால் அந்த மாணவனை இன்று மதம் மாறி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஷப்னம் தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில் இரண்டாவதாக தௌபிக் என்பவரை திருமணம் செய்தார்.
இதில் தௌபிக் கடந்த சில வருடங்களுக்கு ஒரு விபத்தில் சிக்கியதால் ஊனமடைந்தார். இவருக்கு சமீபத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு 18 வயது மாணவனுடன் காதல் மலரவே அதற்காக முஸ்லிம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறி தன்னுடைய பெயரை ஷிவானி என்று மாற்றிக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலத்தில் மத மாற்றம் என்பது ஒரு தடை சட்டமாகும்.
இங்கு கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்படுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆனால் இவர்கள் விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதாவது இந்த திருமணத்தில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்கு இன்று திருமண நடைபெற்ற நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.