செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை சேர்ந்த ஏழைப் பெண் ஒருவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு வழியில்லை என்று கூறி தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். இதன் காரணமாக விஜயின் அறிவுறுத்தலின் பெயரில் தமிழக வெற்றி கழகத்தினர் தளபதி தேநீர் விடுதியை அந்த பெண்ணுக்கு வைத்துக் கொடுத்துள்ளனர். இந்த கடையை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று திறந்து வைத்தார். அதன் பிறகு கடையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அவர், பின்னர் கடையில் முதல் டீயை போட்டுக் கொடுத்து அதனை ஆற்றினார்.

இந்நிலையில் உதவி கேட்ட அந்தப் பெண் கணவரை இழந்து 3 குழந்தைகளுடன் வாழ்வாதாரத்திற்காக போராடினார். அவர் கண்ணீர் மல்க பனையூர் அலுவலகத்தில் உதவி கேட்ட நிலையில் உடனடியாக அவர்கள் விஜய்  டீக்கடை வைத்து கொடுத்து வாழ்வாதாரத்திற்கு உதவியுள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விஜயின் ஆதரவாளர்கள் விஜய் மற்றும் முதல்வரானால் அனைவருமே இனி தமிழ்நாட்டில் முதலாளிகள் தான் என்று பதிவிட்டு இந்த வீடியோக்களை வைரல் ஆக்கி வருகிறார்கள்.