
திருப்பூர் மாவட்டம் ஆலங்காயம் அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் தென்னை நார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். ஸ்ரீதர் 3-க்கும் மேற்பட்ட ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் உரிய காலத்தில் அந்த தொகையை திரும்ப செலுத்த இயலவில்லை.
இதனால் கடன் செயலி நிறுவனத்தினர் பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். மேலும் பணத்தை கொடுக்காவிட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிப்போம் என மிரட்டி உள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீதர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீதரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.