ஜம்மு காஷ்மீரில் சத்தர் கல்லா பகுதியில் ராணுவ சோதனை சாவடி உள்ளது. இங்கு இன்று அதிகாலை 1.45 மணி அளவில் திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்தார். இதில் 6 வீரர்கள் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் குடியிருப்பு பகுதிகளில் 2 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் காயம் அடைந்தனர். இதில் ஒரு பயங்கரவாதி ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட நிலையில் மற்றொருவர் காயத்துடன் தப்பி ஓடிவிட்டார். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதே போன்ற கடந்த 10-ம் தேதி ரியாசி மாவட்டத்தில் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 41 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் தொடர்ந்து 3 நாட்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் காஷ்மீரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.