
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் சொளரப் ராஜ்புத் என்பவரை அவருடைய மனைவி முஸ்கான் மற்றும் காதலன் சாஹல் ஆகியோர் சேர்ந்து கொடூரமாக கொன்று உடலை 15 துண்டுகளாகவெட்டி நீல நிற ட்ரம்பில் போட்டு பதுக்கியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நகராட்சி பணியாளர் ஒருவர் தன் மனைவியும் தன்னை அதே போன்று கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அஜய் தாக்கூர் என்பவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக சோனியா என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இதில் சோனியாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆக இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் அந்த பெண் குழந்தைகளை தன்னுடைய மகள்களாக அதை ஏற்றுக் கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் ஆரம்பத்தில் வாழ்க்கை அமைதியாக சென்றாலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சோனியா வேறொரு ஆணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் தன்னுடைய இரு மகள்கள் மற்றும் மகன் ஆகியோரை அழைத்துச் சென்று காதலனுடன் லிவிங் உறவில் வாழ தொடங்கிவிட்டார். இந்நிலையில் சோனியா தன் கணவன் அஜய்யிடமிருந்து தற்போது 5 லட்ச ரூபாய் வேண்டும் என்று கூறி மிரட்டல் விடுக்கிறார். ஒருவேளை அவர் பணம் கொடுக்காவிடில் தன்னுடைய மகள்கள் மூலம் பொய் புகார் அளிக்க வைப்பேன் என்றும் இல்லை எனில் மீரட்டில் நடந்தது போன்று உன்னையும் கொலை செய்து ட்ரம்பில் போட்டு துண்டு துண்டாக வெட்டி வைத்து சிமெண்ட் போட்டு பூசி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்