
இந்தியாவின் முன்னணி வங்கி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் வங்கி அனுபவங்களை மேலும் மேம்படுத்துவதற்காக தன்னுடைய அமைப்பை மேம்படுத்த வாடிக்கையாளர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பி உள்ளது.
இந்த மாதம் 13ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை கணினி மேம்படுத்தப்படும். இந்த நேரத்தில் ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகள் மட்டுமே இயங்கும் எனவும் மூன்றரை மணி நேரத்தில் (காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 மணி வரை) UPI வேலை செய்யாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெட் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகள் ஓரளவு கிடைக்கும் என்ற தகவல் தெரிவித்துள்ளது.