குடவாசல்: குடவாசலைச் சேர்ந்த ரவுடி அசோக்குமாரின் வங்கி கணக்கில் ரூ.2.5 கோடி இருந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே மாதத்தில் அசோக்குமாரின் வங்கி கணக்கில் ரூ.10,00,000, ரூ.20,00,000 என ரூ.2,50,00,000 பணம்  தொடர்ந்து  செலுத்தப்பட்டதில் சந்தேகம் ஏற்பட்டு கனரா வங்கி நிர்வாகம் காவல்  நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளது. இந்நிலையில் அசோக்குமாரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு, கொலை, தாக்குதல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளோடு  தலைமறைவாக இருந்த  அசோக்குமாரின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பிய 7 பேரை தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்.