
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பள்ளிகளுக்கு நாளை பிப்ரவரி 3ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகை காண தேர்வு நாளை நடைபெற உள்ளதால் இந்த பணியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக பிப்ரவரி 10ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக புயல் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த விடுமுறையை ஈடு செய்ய அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.