திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குமார் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 வயதில் சுபஸ்ரீ என்ற மகள் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் குழந்தையை கணவனிடம் விட்டுவிட்டு மனைவி பிரிந்து சென்று விட்டார்.

தன் குழந்தையுடன் தனியாக வசித்து வந்த குமார் மிகவும் மன வேதனையில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து விட்டார். இதில் குமார் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் குழந்தை சுபஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மானூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.